Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிங்கப்பூரில் சரியான வேலை வாங்கி தராமல் ரூ1.75 லட்சம் ஏமாற்றிய திருச்சி கன்சல்டன்சி உரிமையாளர் மீது கண்ட்டோன்மென்ட் போலீசார் வழக்கு .

0

'- Advertisement -

சிங்கப்பூரில் சரியான வேலை வாங்கி தராமல் ரூ1.75 லட்சம் ஏமாற்றிய திருச்சி கன்சல்டன்சி உரிமையாளர் மீது கண்ட்டோன்மென்ட் போலீசார் வழக்கு .

Ad banner

கண்டோன்மென்ட் பகுதியில் கன்சல்டன்சி நடத்தி வருபவர் மணிவண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்துள்ளார். அதை நம்பிய குமாரவேல், வேலைக்காக ரூ.4 லட்சத்து

75 ஆயிரம் பணத்தை மணிவண்ணனிடம் கொடுத்துள்ளார்.

​இதையடுத்து, குமாரவேலை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார் மணிவண்ணன். பிறகு அங்கு கிடைத்த வேலை திருப்திகரமாக இல்லாததால், குமாரவேல் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.

​அதன்பின்னர், மணிவண்ணன் ரூ3 லட்சத்தை குமாரவேலிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ1,75,000 பணத்தை குமாரவேல் திரும்பக் கேட்டபோது, அதைத் தர மறுத்து ஏமாற்றியுள்ளார்.

​இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நிலுவைத் தொகையான ரூ1,75,000 ஏமாற்றிய மணிவண்ணன் மீது கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.