Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

செலவு ரூ.84 கோடி வருமானம் 0 ..முதல்வர் விஜய் கார் ரேஸை தொடங்கி வைத்த ரகசியம் இதுதான் .,யூ டியூபர் மரியதாசின் பரபரப்பு பேட்டி

0

'- Advertisement -

தோழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அரசு முறை பயணமாக கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரத்திற்குப் பயணம் மேற்கொண்டார்.

Ad banner

லண்டன் பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் இந்த வார இறுதியில் நடைபெற்ற ‘மிச்செலின் லீ மேன்ஸ் கப்’ கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இது அவருடைய பயணத்தின் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

தமிழகத்தில் சர்வதேசத் தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்அமைக்கப்படும் எனச் சட்டமன்றத்தில் ஏற்கனவே முதல்வர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, சில்வர்ஸ்டோன் கார் பந்தயப் பாதையையும் அங்குள்ள அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். முதல்வர் விஜய்யின் இந்த லண்டன் பயணத்தின் மூலம் புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனச் சுட்டிக்காட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இதனிடையே, நடிகர் அஜித்தின் கார் ரேஸ் குறித்த விவகாரத்தை ஒப்பிட்டுப் பிரபல யூடியூபர் மாரிதாஸ் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு இணையத்திலும் அரசியல் வட்டாரத்திலும் புதிய விவாதங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.2024 முதல் தீவிரமான கார் பந்தய டீம் அமைக்கும் முயற்சியில் உள்ள அஜித் அவர்களின்Ajith Kumar Racing – கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 84 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளார். ஆனால் வருமானம் ஏறக்குறைய ஜீரோ… 2026-ல் இதனை மேற்கொண்டு நடத்துவதற்கு sponsor அவசியமாகிறது. அதில் Campa மட்டுமே குறிப்பிடத்தகுந்த sponsor. போதிய sponsor கிடைக்கவில்லை.Gladiators – In Pursuit of Challenges என்ற ஆவணப்படத்தில் தன் ரேஸில் நடக்கும் காட்சிகளை வைத்து ஒரு திரைப்படம் எடுத்து அதை OTT பிறவழிகளில் வெளியிட முயற்சி எடுக்கப்படுகிறது.ஆனால் அது போதிய அளவு இல்லை. அது அணியின் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்யாது.2026 தேர்தல் முடிந்த கையோடு ஒரு நிறுவனம் sponsor செய்ய வருகிறது. அது Nova Life Space. வெறும் 4 கோடி லாபம் கொண்ட, 46 கோடி அளவில் வருமானம் மட்டுமே உள்ள, 30 கோடி அளவில் கடன் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் sponsor என்று சொல்வதன் பின்னால் லாட்டரி மருமகனும், விஷ்ணு கும்பலும், பெங்களூர் நிறுவனம் ஒன்றும் இருப்பதாக கூறப்படுகிறது.

DLF, Casagrand போன்ற நிறுவனங்கள் கூட பெரிய ஸ்டார் வைத்து எடுக்க தயக்கம் காட்டும் நிலையில் இந்த கும்பல் வருவது அந்த வகையில் தான்…

2026 தேர்தல் முடிந்த கையோடு ஒரு நிறுவனம் sponsor செய்ய வருகிறது. அது Nova Life Space. வெறும் 4 கோடி லாபம் கொண்ட, 46 கோடி அளவில் வருமானம் மட்டுமே உள்ள, 30 கோடி அளவில் கடன் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் sponsor என்று சொல்வதன் பின்னால் லாட்டரி மருமகனும், விஷ்ணு கும்பலும், பெங்களூர் நிறுவனம் ஒன்றும் இருப்பதாக கூறப்படுகிறது.

DLF, Casagrand போன்ற நிறுவனங்கள் கூட பெரிய ஸ்டார் வைத்து எடுக்க தயக்கம் காட்டும் நிலையில் இந்த கும்பல் வருவது அந்த வகையில் தான்…

அந்த sponsor மட்டும் அல்லாமல், மேலும் வருமானம் மற்றும் sponsor கிடைக்க ஐடியா கொடுத்து, Gladiators ஆவணப்படத்தில் விஜய் வருவது நல்லது, மேலும் sponsor வழிவகை செய்யலாம், அரசு இதற்கு புதிய திட்டம் கொண்டு வருகிறது, அதிலும் உங்களை இணைக்கலாம் என பல வழிகள் காட்டப்படுகிறது.

விளைவு – நல்ல விஷயம் தானே என அஜித் ஏற்று, விஜய், திரிஷா, ஆதவ், விஷ்ணு ரெட்டி பயணம்… லண்டனில் ஜோலியை முடித்த கதை இங்கே முடிகிறது.

சரி, இதில் என்ன திட்டம் பெருசாக இருக்கப் போகிறது?

தன் ஆட்சிக்கு எதிராக தன் வழியில் திரைப்படங்கள் மூலம் 2 வசனம் வைத்தாலே அஜித் படம் ஓட்டலாம் என அஜித் நினைத்தாலே ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அத்தோடு அது சிறந்த ஐடியாவும் கூட

ஆக, நட்பு பாராட்டி கெடுப்பது தான் சிறந்த வழி விஜய் கும்பலுக்கு… (தனி ஐடி டீம் வைத்து மொத்த குடும்பத்தையும் அருவருப்பாக திட்டிய கும்பல் இது.)

 

இன்னொரு பக்கம் திரைத்துறையிலும் ஏறக்குறைய எதிரி இல்லை என்றபோது, போட்டியாளர் இல்லை என்றபோது, பெரிய இடம் இருக்காது. தயாரிப்பாளர்களை அதிகாரம் கொண்டு மிரட்டிவிட முடியும்.

 

அடுத்த சில ஆண்டுகளில் அஜித் மார்க்கெட் முடிந்தது, விஜய் அரசியலுக்கு சென்றதால் என எழுத சொல்லி முடித்துவிடலாம். எதிர்காலத்திலும் சிக்கல் இல்லாமல் செய்துவிடலாம்.

மொத்தத்தில் விஜய் அரசியலிலும் லாபம், திரையில் தன்னால் தான் அஜித் – தான் இல்லை என்றால் அஜித் அழிந்தார் என்ற தோற்றமும் உருவாக்கிவிட முடியும்.

சிக்கலான கணக்கை சரியாக முடித்த வகையில் விஜய் கும்பல் சரியாக முடித்துவிட்டது என்று பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.