Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஓடும் பஸ்சில் முதியவரின் டவுசர் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 50 ஆயிரம் அபேஸ்

0

'- Advertisement -

திருச்சியில்  ஓடும் பஸ்சில் முதியவரின் டவுசர் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 50 ஆயிரம் அபேஸ்

Ad banner

மர்ம ஆசாமிக்கு வலை …

புதுக்கோட்டை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கிலி (வயது 57) இவர் தனது மகளின் திருமணத்திற்காக பொருட்கள் வாங்க ரூ.50 ஆயிரத்தை தனது ட்ரவுசர் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு புதுக்கோட்டையில் இருந்து திருச்சி பால் பண்ணைக்கு வந்து உள்ளார் . பின்னர் இவர் பால்பனையிலிருந்து காந்தி மார்க்கெட் செல்வதற்காக ஒரு டவுன் பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மகாலட்சுமி நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது தனது டவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர் யாரோ பிளேடால் கிழித்து திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து அவர் திருச்சி காந்தி மார்க்கெட் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.