திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் புதிய வெற்றிவேல் ஜவுளி ஸ்டோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது ..
சத்திரம் பேருந்து நிலையம் சித்ரா காம்ப்ளக்ஸில் ரகுநாத் ஹோட்டல் அருகில் அமைந்துள்ள இந்த ஜவுளிக்கடை திருச்சி கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் .
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் வெற்றிவேல் ஜவுளி நிறுவன உரிமையாளர் எம். ராம்குமார் , எஸ். குணசேகர், கே.சண்முகம், வி சண்முகம், முத்துக்குமார், நவீன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
திறப்பு விழாவின் பின் வெற்றிவேல் ஜவுளி கடை உரிமையாளர் ராம்குமார் தெரிவித்ததாவது:-அரியலூர், பெரம்பலூர், கரூர், சமயபுரம் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் அருகிலேயே மக்கள் விரும்பும் அனைத்து வகையான ரெடிமேடு பற்றும் ஜவுளிகளும், ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்கு என அனைவருக்கும் ஏற்ற தரமான ஜவுளி ரகங்கள் நம்பிக்கை, நாணயம், வைகாசியான எங்கள் கடையில் ஜவுளிகளே பெற அனைவரையும் அழைக்கின்றோம் மேலும் இங்கு அனைத்து வகை ஜவுளிகளும் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் என தெரிவித்தார்.

