எங்கள் இயக்கத்தின் வரலாறு ஏசி ரூமில் எழுதி வாங்கிய டயலாக் பேப்பர் அல்ல;போராட்டக் களங்களில் இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகேஷ் பொய்யாமொழி .
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்து சட்டசபையில் அவதூறாக பேசியதை கண்டித்து திருச்சி மரக்கடையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு,
மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி பேசியதாவது,
முதலமைச்சர் விஜய் பேசும் போதெல்லாம் ஹிட்லர் நினைவுதான் வருகிறது! அமைச்சர்கள் எல்லாரும் கோயபல்ஸ் கோட்பாட்டைதான் பின்பற்றுகிறார்கள். பொய்… பொய்… பொய்… பேசுவதை மட்டுமே கொள்கையாக கொண்டிருக்கிறார்கள்!
மிசா தியாகிகளை கொச்சைப்படுத்துவது என்பது ஆர்.எஸ்.எஸ். (Agenda)அஜன்டா. முதலில் மாஃபா பாண்டியராஜன் பேசினார். அடுத்து எச்.ராஜா பேசினார். இப்போது காக்கி டவுசர் நிர்மல்குமார் பேசுகிறார். மூவரும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்!
அதிகாரத்திற்கு கட்டுப்பட மாட்டேன்’ எனச் சொல்லி சிறைக்கு சென்றவரை பற்றி, ‘எனது படத்தை ரிலீஸ் செய்ய விடுங்கள்’ என கொடநாடு சென்று கெஞ்சியவர் பேசுவதற்கு துளியும் தகுதி இல்லை!
திரையில் டூப் போட்டு சண்டை போடுவதற்கும், களத்தில் இறங்கி மக்கள் உரிமைக்காக லத்தி அடி வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் இளைஞர்களுக்கு நன்றாகவே தெரியும் .
எங்கள் இயக்கத்தின் வரலாறு ஏசி ரூமில் எழுதி வாங்கிய டயலாக் பேப்பர் அல்ல; சிறைக் கொட்டடிகளிலும், போராட்டக் களங்களிலும் இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு என்னடா அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசினார் .
கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் , பகுதி செயலாளர்கள் மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள்,வட்டச் செயலாளர்கள் ஒன்றிய கிளை செயலாளர்கள் ,தொண்டர்கள் என ஏராளமானோர் திரளாக பங்கேற்றனர்.

