ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரைகள் விற்ற பிரபல ரவுடி கைது… 100 போதை மாத்திரைகள், சலைன் வாட்டர் பாட்டில், ஊசிகள் பறிமுதல்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த ரவுடி கைது
திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் மயானம் அருகே மர்ம நபர் ஒருவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அங்கு போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த ஸ்ரீரங்கம் கீழவாசல் சக்தி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த மதன்குமார் என்கிற ஆட்டு மதன் (வயது 27) என்பவரை கைது செய்தனர் … இவர் சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் உள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் …
அவரிடம் இருந்து 100 போதை மாத்திரைகள், சலைன் வாட்டர் பாட்டில், ஊசிகள் போன்றவற்றைஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.

