Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மதுபானங்கள் தட்டுப்பாட்டால் திருச்சி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனமகிழ் மன்ற நிர்வாகிகள்

0

'- Advertisement -

மதுபானங்கள் தட்டுப்பாட்டால் திருச்சி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனமகிழ் மன்ற நிர்வாகிகள் ..

Ad banner

மனமகிழ் மன்றத்தினருடன்  அதிகாரிகள் பேச்சு வார்த்தை ..

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 32 மன மகிழ் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு கடந்த 15 நாட்களாக போதிய அளவு மதுபான வகைகள் சப்ளை செய்யப்படவில்லை.  மிகவும் விலை குறைந்த மதுபான பாட்டில்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து எஃப் எல் 2 (மனமகிழ் மன்றங்கள்) திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஜெயக்குமார், சிவகுமார், கார்த்திகேயன், ராஜா, சிவா கண்ணன் உள்ளிட்ட மனமகிழ் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று திருச்சி துவாக்குடியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் டாஸ்மாக் மேலாளர் அதியமான் கவியரசு போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் தான் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது மனமகிழ் மன்றத்தினர் தரப்பில், நாங்கள் ஆண்டுக்கு ரூபாய் 25 லட்சம் உரிமம் கட்டணம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு செலுத்தி தொழில் செய்து வருகிறோம்.  அதுமட்டுமில்லாமல் ஆர்டர் கொடுக்கும் போதே மதுபானங்களுக்கான தொகையையும் முன்கூட்டியே செலுத்துகிறோம்.  ஆனால் கடந்த 15 நாட்களாக மது பிரியர்கள் விரும்பும் சரக்குகள் வழங்கப்படவில்லை.  அதேநேரம் அந்த சரக்குகள் டாஸ்மாக் மதுபான கடைகளில் கிடைக்கிறது.  எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சரக்கு வழங்க வேண்டும் என்றனர்.

இந்த முற்றுகை போராட்டம் டாஸ்மாக் மேலாளர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.