Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வையம்பட்டியில் மகள் திருமணமான பின் தனிமையில் வசித்து வந்த விதவைப் பெண் தற்கொலை

0

'- Advertisement -

வையம்பட்டியில் மகள் திருமணமான பின் தனிமையில் வசித்து வந்த விதவைப் பெண்  தீக்குளித்து தற்கொலை

Ad banner

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆர்.எஸ். வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேங்கட சுப்ரமணி. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 56). வேங்கட சுப்ரமணி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் .

இந்த தம்பதிகளுக்கு விஜயலட்சுமி (வயது 31) என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மதுரையில் வசித்து வருகிறார். கணவன் மறைவுக்குப் பின்னர் மகளை வளர்த்து ஆளாக்கிய ஜெயலட்சுமி மகளை திருமணம் செய்து கொடுத்த பின்னர் தனியாக வசித்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது மனநிலையில் குழப்பம் ஏற்பட்டது. மகள் ஜெயலட்சுமி மற்றும் உறவினர்கள் அவ்வப்போது வந்து அவரை கவனித்து சென்றனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில்  கடந்த 2 ஆம் தேதி ஜெயலட்சுமி தனது உடல் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்துக் கொண்டார்.

பின்னர் உடல் கருகி அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்த்தனர் .. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர் ..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.