Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் இன்று தொடங்கியது

0

'- Advertisement -

திருச்சி மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் அண்ணா விளையாட்ரங்கில் இன்று தொடங்கியது

Ad banner

முதல் நாளான இன்று திங்கள் கிழமை ( 07.09.26) காலை 9.00 மணிக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில், ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.சுரேஷ்பாபு, இணை செயலாளர் எம்.ரமேஷ், துணை செயலாளர் எம்.கனகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

வந்தவர்களை தடகள சங்க பொருளாளர் சி.ரவிசங்கர் வரவேற்றார்.

போட்டியை திருச்சி மாவட்ட தடகள சங்க முதுநிலை துணை தலைவர் ஒலிம்பியன் சுப்ரமணியன்,

ரயில்வே முன்னாள் தொழிலாளர் நல அதிகாரி சுந்தரமூர்த்தி, உடற்கல்வி இயக்குனர் முனைவர் சுதமதிரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், .சுந்தர் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தார்கள்.

போட்டியில் 1750 மேற்பட்ட தடகளவீரர்கள் கலந்துக் கொண்டார்கள்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 8, 10, 12, 14, 16, 18, 20 ஆகிய வயதுடைய ஆண்- பெண் இருபாலருக்கான 100மீ, 200மீ, 400மீ,800மீ,1500மீ,உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற தடகள போட்டிகள் நடைபெறுகிறது.

நாளை செவ்வாய்க்கிழமை (செப்-08ம் தேதி) மாலை 5.30 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெறும்.

 

மேலும், தனி நபருக்கான சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் தனி நபர் கோப்பை வழங்கப்பட உள்ளது.

தகுதி அடிப்டையில் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், திண்டுக்கலில் அக்-02 முதல் 04ம் தேதி தொடங்கும் அனைத்து மாவட்டங்கள் இடையிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நிகழ்வு மேலாண்மை தடகள தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.நடராஜன்,   உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஹிரிஹர ராமச்சந்திரன் நிகழ்ச்சி தொகுப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.