Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் நேற்றைய ஆசிரியர் தினத்தை “செப்டம்பர் 5 கருப்பு தினமாக” அனுசரிப்பு . தவெக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் 10 முறை மனு அளித்தம் பயனில்லை

0

'- Advertisement -

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் நேற்றைய ஆசிரியர் தினத்தை  “செப்டம்பர் 5 கருப்பு தினமாக” அனுசரிப்பு .

Ad banner

சென்னை மாநகரில் சிவானந்தா சாலையில்  2013 ஆம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் மேற்கொண்டனர்..

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்… 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றும் 13 ஆண்டுகளாக பணியின்றி அடிப்படை வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். நாங்கள் தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஒரு பணி நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்று 2018 ஆம் ஆண்டு அரசாணை 149 பிறப்பிக்கப்பட்டது.

இந்த இருள் சூழ்ந்த அந்த அரசாணையை எதிர்த்து அதனை இரத்துச்செய்யக்கோரி அனைத்து கட்சி தலைவர்களும் எங்களுக்காக குரல் கொடுத்துள்ளனர். மேலும் இதனை எதிர்த்து மதுரை, திருச்சி, ஈரோடு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் 100 க்கும் மேற்பட்ட போராட்டங்களை எடுத்தும் இதுவரை எங்களுக்கு எந்தவொரு தீர்வும் ஏற்படவில்லை.

எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினுடைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை பத்துக்கு மேற்பட்ட முறை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.தமிழக வெற்றி கழகத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, பத்தாயிரம் ஆசிரியர் பெருமக்களிடம் கையெழுத்தைப் பெற்று நியமனத் தேர்வை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தியுள்ளோம்.

Oplus_131072

எங்களுடைய கோரிக்கையை ஏற்று, எங்களைப் போன்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வாய்ப்பினை இழந்த தமிழக வெற்றிக் கழகத்தினுடைய குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிந்து அவர்கள் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது நியமனத் தேர்வை ரத்து செய்துவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வேலைவாய்ப்புகளை அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் குரல் கொடுத்தார்.

மேலும் இது குறித்து தமிழக முதல்வரை சந்திக்க பலமுறை முயற்சித்த போதும் எங்களுக்கு அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே எங்களது 13 ஆண்டு கால கோரிக்கைகளை ஏற்று தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி எங்களை அழைத்துப் பேசி விரைவில் நல்லதொரு தீர்வை நல்கிட வேண்டும்.

இதுவரை எங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காததால் நடப்பாண்டு ஆசிரியர் தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கிறோம். மேலும் எங்கள் கோரிக்கை நிறைவேற்ற தாமதமானால் மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தையும், சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தையும் விரைவில் மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலும், ஊடக அறிக்கையாகவும் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் ம.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இவர்களது நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழக முதல்வரிடம் பேசி நல்ல தீர்வை வழங்க வேண்டும் பணிநியமனம் வேண்டும் என்பதே ஆசிரியர் தினத்தில் இச்சங்கத்தில் உள்ள அனைவரின் குரலாகவும் உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.