Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்களை விசாரித்து அனுப்பிய காவல்துறை .பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை விசாரித்து அனுப்ப கூறியதா தவெக அரசு . பொதுமக்கள் கேள்வி .

0

'- Advertisement -

திருச்சியில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்களை அழைத்துச் சென்று அனுப்பிய போலீசார் பொதுமக்கள் போராட்டத்திற்கு பின் கைது..

Ad banner

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வரகனேரி பகுதியில் பெற்றோர் இல்லாத 16 வயது சிறுமி உள்ளார். இவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. நேற்று மாலை அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த நான்கு சிறுவர்கள் அருகில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்திற்கு அழைத்து சென்று உள்ளனர். அங்கு அந்த சிறுமியை வைத்து 4 சிறுவர்கள் சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர் . இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி அருகில் உள்ள பொதுமக்களிடம் கூறி கதறி அழுதுள்ளார் இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த அப்பகுதி பொதுமக்கள் இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை அனைத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.இதனைத் தொடர்ந்து அந்த சிறுவர்களை அழைத்த கோட்டை காவல் நிலையம் போலீசார் அழைத்து விசாரணை என்ற பெயரில் பேரழகி விசாரித்து அந்த சிறுவர்களை திரும்பி அனுப்பி வைத்தனர்.

இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் .யாரும் இல்லாத இந்த சிறுமிக்கு நடந்த இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பது காவல்துறை ஏன் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வரகனேரி 30 ஆவது வார்டு பகுதியில் உள்ள ஆபீஸ், ஆனஸ்,ரகுமான், இர்ஃபான் ஆகிய நான்கு சிறுவர்களையும் மீண்டும் அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நாலு சிறுவர்களும் சேர்ந்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து போலீசார் அந்த 4 சிறுவர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து நான்கு சிறுவர்களையும் கைது செய்து தஞ்சை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.கைது செய்யப்பட்ட நாலு சிறுவர்களும் 10,9 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது.சமீப காலமாக அந்தப் பகுதியில் சிறுவர்கள் போதை மாத்திரை கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது

சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் ..

குற்றவாளிகள் என பிடித்துக் கொடுத்து காவல்துறை முதலில் அவர்களை விடுவித்தது ஏன் என,கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறியுள்ளதா என அப்பகுதி பொதுமக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.