திருச்சி பிரட்டியூரில் மூன்று கடைகள் பூட்டை உடைத்து விலை உயர்ந்த கேமரா மற்றும் பணம் திருட்டு ..இது எங்கள் லிமிட் இல்லை எனக் கூறி இதுவரை வழக்குப்பதிாமல் இழுத்தடிப்பு ..
திருச்சி பிராட்டியூரில் உள்ள வர்மா நகரில் அமைந்துள்ள ஒரே காம்ப்ளக்ஸில் கேமரா கடை அரிசி கடை மற்றும் பேன்சி கடைகளில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம ஆசாமிகள் கேமரா கடையிலிருந்து விளைவு எந்த கேமரா ஒன்று மற்றும் 25 ஆயிரம் பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது ..அரிசி கடையில் 16,000 மற்றும் பேன்சி ஸ்டோரில் ரூபாய் 10,000 திருட்டுப் போய் உள்ளதாக கூறப்படுகிறது .இந்த திருட்டு சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது சம்பவம் இடம் வந்த சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் இது எங்கள் லிமிடில் வராது கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறி வழக்குப்பதிவு செய்யாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது
.இதனால் தற்போது அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாமா என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

