ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 27 கிலோ எடை உள்ள குட்காவை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை காவல்துறையினர்
திருச்சி இருப்புப் பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர் ஆதார் பச்சேரா அவர்கள் உத்தரவின் பெயரில் திருச்சி இருப்புப் பாதை உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி அவர்களின் மேற்பார்வையில்
நேற்று வெள்ளிக்கிழமை (21/08/26ம் தேதி) சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , மற்றும் காவலர்கள் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர் சகிதம்
வண்டி எண். 12663 ஹவுராவில் இருந்து வந்த ரயிலில் விழுப்புரம் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை, செல்லும் வண்டியில் , தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா, போன்ற போதைப் பொருட்களை சோதனை செய்ததில் பின்புறம் உள்ள பொது பெட்டியில் வெவ்வேறு இருக்கைக்குக் அடியில் கேப்பாரட்ற்று கிடந்த இரண்டு சோல்டர் பேக் கில் சோதனை செய்ததில் குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. மொத்தம் 27கிலோ எடை கொண்ட அவற்றை பறிமுதல் செய்து கொண்டுவந்து நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது

