தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் 11ம் ஆண்டு கோ பூஜை விழா..வரலட்சுமி நோன்பை முன்னிட்டு மற்றும் உலக நன்மை வேண்டியும் இன்று நடைபெற்றது .
திரளான பக்தர்கள் வழிபாடு..
தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக உலகநன்மை வேண்டி , வரலக்ஷ்மி நோன்பை முன்னிட்டு 11-ம் ஆண்டாக மாபெரும் கோ பூஜை மற்றும் ரிஷப பூஜை விழா இன்று பீமா நகர் செடல் மாரியம்மன் கோயில் திடலில் நடைபெற்றது. மதியம் அன்னதானத்துடன், மாலை கோமாதாவுடன் கோவில் பிரதட்சணமும் திருச்சி, பீமநகர் ஶ்ரீ செடல் மாரியம்மன் கோவில் திடலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை பேரவையின் நிறுவனர் வி.சி. ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார்.மற்றும் பேரவையின் நிர்வாகிகளான தினேஷ் கண்ணன், ஜெய்மாருதி ரமேஷ், சித்தார்த்தன், கமல்ராஜ் , சதீஷ் முன்னிலை ஆகியோர் வகித்தார்கள்,
இந்த கோ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.

