Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆராய்ச்சி படிப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில் அரசு அலட்சியம் காட்டுகிறது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

0

'- Advertisement -

மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில் அரசு அலட்சியம் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டிவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நடப்பாண்டில் அதிகரித்து இருப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்படுகிறது. அந்த திட்டத்தின் கீழ் 2025-26ம் கல்வியாண்டில் திராவிட மாடல் ஆட்சி காலத்தில் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கை பெற்று, தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதில் அரசு ஏன் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறது?.ஏற்கனவே, இங்கிலாந்திலுள்ள கல்வி நிறுவனங்களில் பட்ட மேற்படிப்புக்கு சேர நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ள நம் மாணவர்களுக்கு மாநில அரசின் கல்வி உதவித்தொகையை ஏற்க முடியாது. ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்ற புதிய விதியை சுட்டிக்காட்டி சேர்க்கை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த புதிய விதியின் காரணமாக கல்வி நிறுவனங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் அமைப்பு, அதனை இடையிலேயே நிறுத்திவிட்டால் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை உருவாகுகிறது. எனவே இடை நிற்றல் ஏற்படும் சூழலும் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பார்த்தால், மலேசியா நாட்டில் பயிலும் நம்முடைய மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கட்டணம் செலுத்தாமல் தவெக அரசு அலட்சியமாக இருப்பது எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசின் கல்வி உதவித்தொகையை நேரடியாக ஏற்க உயர்கல்வி நிறுவனங்கள் மறுக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இதுபோன்று எவ்வளவு நாடுகளில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களோ என்கிற கேள்வியும் எழுகிறது.இதுமாணவர்களுக்கு எத்தகைய மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினைத்து பார்க்கவே வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

Ad banner

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.