சக்தி நீட் அகாடமி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவுடன் இலவச நீட் பயிற்சி . திருச்சியில் நிர்வாக இயக்குனர் அருணாச்சலம் தகவல் .
சக்தி நீட் அகாடமி சார்பில் 100 அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கும் இடம் உணவுடன் இலவச நீட் பயிற்சி .நிர்வாக இயக்குனர் அருணாச்சலம் தகவல் .
திருச்சி மற்றும் மதுரையை தலைமை இடமாகக் கொண்டு அகாடமி வருகிறது சக்தி நீட் அகாடமி.இங்கு நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குனர் அருணாச்சலம் அரசு பள்ளிகளில் பயின்று இந்த ஆண்டு நீட் தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெற்று
மருத்துவ படிப்பினை தவறவிட்ட மாணவர்களுக்கு ஓராண்டு இலவச பயிற்சி அளிக்க முன்வந்துள்ளார். இது தொடர்பாக திருச்சியில் இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
எம்பிபிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி வருகிறது. இதில் தற்போது 510 சீட்டு வரை ஒதுக்கீடு கிடைக்கிறது. இந்த கல்வி ஆண்டில் உண்டு உறைவிட அரசு மாதிரி பள்ளிகளில் பயின்ற 20 சதவீத மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டில் தங்களுக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 400க்கும் மேல் மதிப்பெண் எடுத்து எம்பிபிஎஸ் சீட்டு கிடைக்காமல் இருக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு சக்தி நீட் அகாடமி சார்பில் முற்றிலும் இலவசமாக பயிற்சி அளிக்கவுள்ளோம்.
இதற்காக முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 100 மாணவர்களுக்கு ரூ. 2 கோடி செலவில் தங்குமிடம், சாப்பாடு, யூனிபார்ம் மற்றும் கல்வி கட்டணம் அனைத்தும் இலவசமாக எங்கள் பயிற்சி மையத்தில் வழங்க இருக்கின்றோம். தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பகுதியில் உள்ள மாணவர்களும் இதில் பங்கேற்கலாம்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது இணை இயக்குனர் ஆதித்யா அருணாச்சலம் உடன் இருந்தார்

