ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்களில் எடை குறைவு இருப்பதை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை..
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்
அரசுக்கு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் தங்க பூமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலை வைத்தார்.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் தினேஷ் குமார் சிறப்புரை ஆற்றி பேசும் பொழுதுரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்களில் எடை குறைவு இருப்பதை சரி செய்ய வேண்டும்.ரேஷன் கடை ஊழியர்களுக்கு சமமான போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும் ஊதிய உயர்வை மூன்று ஆண்டுகளுக்கு என திருத்தி அரசாணை வெளியிட வேண்டும் ரேஷன் கடைகளில் கழிவறை இல்லாத காரணத்தால் ஊழியர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள் எனவே அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் தாயுமானவர் திட்டத்தில் உள்ள சிக்கல்களை சரி செய்ய வேண்டும்.
தமிழக அரசு சார்பில் கொண்டு வரும் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சென்று சேர்க்க ரேஷன் கடை ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு
அளிப்போம்.
ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு சங்கம் முழு ஒத்துழைப்பு தரும் என்று பேசினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் கார்த்திகேயன், முத்து, வாசு, அறிவு, மகளிர் அணி பரக்கத் நிஷா, சசிகலா, தனலட்சுமி, கவிதா, துரைப்பாண்டி,ரமேஷ், ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
முடிவில் மாவட்ட பொருளாளர் பழனிவேல் ராஜன் நன்றி கூறினார்

