Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாயமான 3 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான திருச்சி போலீசாருக்கு பாராட்டு..

0

'- Advertisement -

Ad banner

திருச்சி ஆசிரமத்தில் இருந்து மாயமான 3 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான திருச்சி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு..

திருச்சி விமான நிலையம் எதிரில் உள்ள வயர்லெஸ் ரோடு பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து நேற்று மூன்று பெண் குழந்தைகள் (சுமார் 15, 17 வயது உள்ள பெண் குழந்தைகள்)

திடீரென்று மாயமாகி விட்டார்கள். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் துனிதமாக செயல்பட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது

இந்நிலையில் காணாமல் போன 3 சிறுமிகளும் வேளாங்கண்ணியில் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மேற்கண்ட 3 சிறுமிகளையும் போலீசார் மீட்டு திருச்சிக்கு அழைத்து வந்தனர்.

மாயமான குழந்தைகளை விரைந்து கண்டறிந்து பத்திரமாக மீட்ட தலைமைக்காவலர் ஜான் ஜோசப் மற்றும் காவலர் செந்தில் ஆகியோரின் நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.