Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போதை வஸ்துகளை உபயோகப்படுத்தி கொண்டு பூஜை செய்யக்கூட கோயிலுக்கு வராத திருச்சியில் உள்ள பிரபல கோயில் அர்ச்சகர் மீது புகார் அளித்தும் கண்டுகொள்ளாத இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் ..

0

'- Advertisement -

Ad banner

திருச்சி மாநகரம் ஹீபர் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சர்வ சித்தி செல்வ விநாயகர் திருக்கோவில் அர்ச்சகர் S.D. பெரியண்ணன் என்பவர் உள்ளார்.

அவரின் மேல் அப்பகுதி தெருவாசிகள் மற்றும் பக்தர்கள் இந்து சமய அறநிலைய அதிகாரிகளிடம் பல்வேறு புகார் மனு அளித்து உள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு தண்ணி காட்டும் விதமாக அர்ச்சகர் கோவிலுக்கு பூஜைகள் செய்யக்கூட சரியா வருவதில்லை . மேலும் அவர் பான்பராக் ஹான்ஸ் போன்ற போதை வஸ்துகளை உபயோகிக்கிறார் என்றும் மனு அளித்து உள்ளனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அர்ச்சகர் பெரியண்ணன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளார்கள்.

அர்ச்சகர் பெரியண்ணன் மீது துறை ரீதியாக சட்டப்படி நடவடிக்கை எடுத்து முறையாக வேற அர்ச்சகரைஸ்ரீ சர்வ சித்தி செல்வ விநாயகர் திருக்கோவிலுக்கு நியமனம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.