Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உழைக்காமல் பணம் சம்பாதிக்கலாம் என் நம்பி ஆன்லைனில் பல லட்சம் ஏமாந்த 3 பேர் திருச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்.

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் 3 பேரிடம் ஆன் லைனில் ரூ பல லட்சம் பணம் மோசடி. சைபர் கிரைம் போலீசார் விசாரனை

திருச்சி குழுமணி மெயின் ரோடு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 50) இவருடைய செல்போனுக்கு கடந்த ஜூலை 25 ந் தேதி மர்ம ஆசாமி மூலம் ஒரு குறுஞ்செய்தி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயரில் வந்தது. அதில் அவருடைய வாகனத்திற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை படித்துப் பார்த்த முகமது ரபிக அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் குறுஞ் செய்தியில் இருந்த இணைப்பை கிளிக் செய்த போது அவருக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் வந்தது. பின்னர் திடீரென்று வங்கி கணக்கிலிருந்து ரூ 1. 65,958 பணம் எடுக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து தன்னை யாரோ ஏமாற்றி விட்டார்கள் என்பதை உணர்ந்த ஆதி மூலம் இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று திருச்சியில் வரகனேரி நித்தியானந்தபுரம் மேல தெருவை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி  மாரி கண்ணு (வயது 51) இவரிடம் கடந்த பத்தாம் தேதி இன்ஸ்டாகிராமில் பார்த்த பொழுது வர்த்தகம் என்ற விளம்பரத்தை கண்டு அந்த இணைப்பை கிளிக் செய்தார். இந்நிலையில் அடையாளம் தெரியாத ஒரு நபர் ஷேர் சாட் விளம்பரங்களை லைக் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து குறிப்பாக 20 விளம்பரங்களை லைக் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரின் ஆசை வார்த்தைகளை நம்பி மாரிக்கண்ணு இந்த விளம்பரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நினைத்து தனது வங்கிய கணக்கில் இருந்த ரூ 2 லட்சத்து 84 ஆயிரத்து 800 பணத்தை முதலீடு செய்தார். ஆனால் அந்த மர்ம ஆசாமி லாப தொகை தராமல் ஏமாற்றியுள்ளார்.போன் செய்தாலும் எடுக்கவில்லை மேலும் தான் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து மாரி கண்ணு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார் . அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் திருச்சி திருவானைக்கோவில் டிரங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 50) இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த மதிவாணன் (வயது 37) என்ற வாலிபர் அறிமுகமானார். இவர் தான் கோவையில் உழவன் காய்கறி மார்க்கெட் வைத்திருப்பதாகவும், இந்த தொழிலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆதிமூலத்திடம் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய ஆதிமூலம் மதிவானிடம் ரூ. 11.70 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் சிறிது காலத்துக்கு பிறகு அந்த பணத்திற்கு உரிய லாபத்தை தரவில்லை, மாறாக கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதத்தை உணர்ந்த ஆதி மூலம் திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மதிவாணனை கைது செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.