பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்.
அவர்களின் கோரிக்கைகள்:-
பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கையான
‘பணி நிரந்தரம் காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும்,
பணி விதிகளை உருவாக்கிட வேண்டும்,
இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும்,
‘பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,
‘அரசு அறிவித்தபடி காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை மாற்று முகமை மூலம் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்,
மதுக்கடைகளை நடத்துவதற்கான செலவினங்களை அரசே ஏற்க வேண்டும்,
‘உடையும் பாட்டில்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு
எஸ். சௌமியமூர்த்தி, உதயசங்கர், சாதிக் பாஷா, சிவக்குமார், நெல்சன்,ஆகியோர் தலைமை வகித்தனர்
ராமஜெயம், சுரேஷ்பாபு, குமார், ராமு, கரிகாலன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மண்டல அளவில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

