திருச்சி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தலைமையில் ஊர்வலமாக சென்று காவேரி தாய்க்கு சீர் வழங்கும் விழா

திருச்சி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பிலமத்திய அரசு வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தலைமையில் ஊர்வலமாக சென்று காவேரி தாய்க்கு சீர் வழங்கும் விழா .
திருச்சி மாவட்டம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆடி 18 பெருக்கை முன்னிட்டு காவிரி தாய்க்கு சீர் கொடுத்தல் விழா நேற்று மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அன்னதான சத்திரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசின் நோட்ரிக் பப்ளிக் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தலைமை தாங்கினார். விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணை தலைவர் ஜெயந்தி சங்கர் வரவேற்றார். நிகழ்ச்சியில் சேவா பாரதி தென் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் இளங்குமார் சம்பத் சிறப்புரையாற்றினார்.
முடிவில் தர்ம யாத்திர பிரமுக் சுந்தரேசன் நன்றி கூறினார் பிறகு காவிரி தாய்க்கு ஊர்வலமாக அனைவரும் புறப்பட்டு ஓடத்துறை காவிரி ஆற்று படித்துறையில் இறங்கி காவிரி ஆற்று மணலில் சென்று காவிரி தாய்க்கு பட்டுபுடவை, சீர்வரிசை சாமான்கள், விதை, தானியங்கள் காய்கறிகள்,

உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து பூஜை செய்து பிறகு காவிரி ஆற்றில் அனைத்து பொருட்களையும் கரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மலைக்கோட்டை ப்ரகண்ட தலைவர் தனசேகர், செயலாளர் மணிகண்டன்,விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன்,
இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க செயல் தலைவர் வையாபுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

