நில விவகாரத்தில் திமுக கவுன்சிலர் நீலமேகம் மீது அவதூறு பரப்பிய நாடார் பேரவை சுரேஷ் தான் போலி பட்டா மூலம் ரூ.எட்டு கோடி மதிப்புள்ள மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்கிறார்.கவுன்சிலர் நீலமேகம் விளக்கம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அகரம் கிராமம் விக்னேஷ் நகர் பகுதியில் நிலம் விவகாரத்தில் திமுக பகுதி செயலாளரும் கவுன்சிலருமான நீலமேகம் மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார்.
இந்திய நாடார் பேரவை நிறுவனத் தலைவர் ஜே டி ஆர் சுரேஷ் தனக்கு சொந்தமான 1,500 சதுர அடி நிலம் விக்னேஷ் நகரில் உள்ளது. தனக்குச் சொந்தமான நிலம் என்றும், அதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிலத்தை அளவீடு செய்ய வந்தபோது, திமுக கவுன்சிலர் நீலமேகம் மற்றும் சிலர் தடுத்து நிறுத்தியதாக ஜெ டி ஆர் சுரேஷ் குற்றம் சாட்டி இருந்தார்.
இதுகுறித்து திமுக பகுதி செயலாளரும் 42 வது வார்டு கவுன்சிலருமான நீலமேகம் அவர்கள் கூறுகையில் இந்த லேஅவுட் 1991 இல் DTP அப்ரூவ்டு வாங்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பு போலியாக 1987-ஆம் ஆண்டு இந்த நிலத்தை வாங்கியதாகவும், உட்பிரிவு செய்யப்பட்டு பத்திர பதிவு செய்து தனிப்பட்டாவும் வாங்கியதாக சுரேஷ் கூறி 8 கோடி மதிப்புள்ள இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்கிறார். மாநகராட்சியால் பூங்கா என ஒதுக்கப்பட்ட 12000 சதுர அடி இடம் இன்றைய சந்தை மதிப்பு எட்டு கோடி . .
1991 ம் ஆண்டு டிடிபி அப்ரூவ்ட் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் சம்பவத்தன்று இடத்தில் கல் ஊன்ற வந்த நபரை எனது தலைமையில் இப்பகுதியில் உள்ள நல சங்க நிர்வாகிகள் அனைவரும் பூங்கா இடத்தை ஆக்கிரமிப்பு செய்யவிடாமல் தடுத்தோம் இதனால் எனது மீது ரூ. 5 லட்சம் பணம் கேட்டதாக வீண் அவதூறு பரப்பி வருகிறார் ஜெ.டி.ஆர் சுரேஷ்.அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க இருக்கின்றோம் எனவும் கூறினார் கவுன்சிலர் நீலமேகம்.

