மாநகராட்சி அலுவலர்கள் பதவி உயர்வுக்கு பல கோடி லஞ்சம். மனு அளித்தும் கண்டுகொள்ளாத முதல்வர் விஜய். தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் வருத்தம்

தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் பணியாற்றி வரும் அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப்படவில்லை. நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் தமிழக முதல்வருமான விஜய் கண்டுகொள்ளாத ஏன் ?அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுச் செயலாளர் சுஜாத் அலி ஆகியோர் கேள்வி.
இதுகுறித்து கடந்த வாரம் தமிழக முதல்வரிடம் அளித்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
அரசாணை எண். 152ல் தமிழ்நாடில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் (சென்னை நீங்கலாக) மக்கள் தொகையின் அடிப்படையில் பணியிடங்களை ஏற்கனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்தியும் புதிய பணியிடங்கள் தோற்றுவித்தும் ஆணையிடப்பட்டது. அதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளுக்கும் அரசாணை எண்.10 ன் மூலம் நகராட்சிகளின் நிலைகளுக்கேற்ப பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 ஐ நடைமுறைப்படுத்தி இதன் மூலம் பொறியாளர் பிரிவில் Pay level 22க்கும் மேலான பணியிடங்களான உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் பணியிடங்கள் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி/ பேரூராட்சி ஆகிய பணியாளர்களை ஒருங்கிணைத்து மாநில அளவிலான பணி மூப்பு பட்டியல் தயார் செய்து வெளியிடப்பட்டதில் பதவி உயர்வுகள் சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, பார்வை 4ல் காணும் அரசாணை எண்.01ன் படி தோற்றுவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கைகேற்ப விகிதாச்சாரம் நிர்ணயம் செய்து பதவி உயர்வானது மூன்று அலகுகளுக்கும் கிடைக்கும் நிலை உருவாக்கப்பட்டது.
பதவி உயர்வு வழங்க நடவடிக்கைகள் தொடக்கப்பட்ட சமயத்தில் பாதிக்கப்பட்ட பணியாளர்களால் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு தடையாணை இருந்ததால் பதவி உயர்வு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்சமயம் நீதிமன்ற தடையாணை விலக்கிகொள்ளப்பட்டதால் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 5 ஆண்டுகள் உதவி செயற்பொறியாளர் பணியிடத்தில் பணிபுரிந்தவர்களின் பெயர்கள் மட்டுமே செயற்பொறியாளர் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்படுவதாக தெரியவருகிறது. சென்னை மாநகராட்சி நீங்கலாக இதர நகராட்சிகளிருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும் போதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படாத காரணத்தினால் உதவி / இளம் பொறியாளர் பணியிடத்திலேயே சுமார் 15 முதல் 20 ஆண்டுகள் பணிபுரிந்து அதன் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு பெற்றனர். இதனால் செயற்பொறியாளர் பதவி உயர்வு பெற 5 ஆண்டு பணி அனுபவத்தை பூர்த்தி செய்யப்பட முடியவில்லை. இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்படுமேயானால் உத்தேசமாக நகராட்சிகளில் உள்ள பணியாளர்களில் 16 பேர் மற்றும் இதர மாநகராட்சிகளில் 6 பேர் என இரு அலகுகளிலும் சேர்த்து 22 பேர் மட்டுமே பதவி உயர்வு பெற முடியும். ஆனால் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் சுமார் 114 பேர் வரை பதவி உயர்வு பெறுவர். இவ்வாறான நடைமுறையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பொறியாளர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவோம். பணி ஓய்வு காலம் வரை பதவி உயர்வு இல்லாமலேயே பணியாற்றும் நிலை ஏற்படும்.

பார்வை 5ல் காணும் அரசாணை எண்.217ல் கண்காணிப்பு பொறியாளராக இருந்த 7 அலுவலர்களை தலைமை பொறியாளராக பதவி உயர்வு வழங்கிய நேர்வில் 6 அலுவலர்களை ஒருவருட பணி அனுபவ காலத்தை பூர்த்தி செய்யாத நிலையில் சிறப்பு விதி தளர்வு செய்து பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் 5 நபர்கள் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் ஆவர். இதே போல் பார்வை 6ல் காணும் அரசாணை எண்.206ல் தலைமை பொறியாளர் பதவி உயர்வு 3 அலுவலர்களுக்கு பணி அனுபவ காலத்தை பூர்த்தி செய்யாத நிலையில் விதித்தளர்வு செய்து பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே முன் நிகழ்வில் நடவடிக்கை எடுக்கப்பட்டதை போன்று தற்பொழுதும் விதித்தளர்வு செய்திட, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட விதிகள் 2025 விதி எண்.395 A ல் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதின் படி,
“395-A. Power to relax. Where the Government is of the opinion that it is necessary or expedient so to do, it may, by order, for reason to be recorded in writing, relax any of the provisions of these rules with respect to any person where the operation of these rules causes hardship:
Provided that educational qualification and Departmental Test prescribed for appointment to any post shall not be relaxed.”
தற்பொழுது உள்ள பரிணியாளர்கள் பாதிக்காமல் பாதுகாக்கும் வகையில் 202 saving clause ல் கீழ்கண்டவாறு உள்ளது,
(i) “Nothing contained in the General Rules and Special Rules in this Chapter shall adversely affect any person who is a member of any service in a municipal corporation, municipal council or town panchayat, on the date of coming into force of these rules.”
எனவே தற்போதுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்களின் நலன் கருதி முன்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு பணி அனுபவ காலத்தை தளர்த்தி உதவி செயற்பொறியாளர் நிலையிருந்து செயற்பொறியாளராக பதவி உயர்வு வழங்கி உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பணி நியமன விவகாரத்தில் பல கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாக தெரிய வருகிறது .இது தமிழக முதல்வருக்கு தெரிய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது .எனவே முதல்வரின் துறையில் நடைபெறும் இந்த பிரச்சனையை விதிமுறைகளுக்கு உட்பட்டு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

