Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 5 இடங்களில் மீண்டும் சோதனை. வருமான வரித்துறை, அமலாக்கத்துறைகளை தொடர்ந்து இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

0

'- Advertisement -

கரூர் தி.மு.க .மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள், ஆதரவாளர்கள் தொடர்புடைய 5 இடங்களில் இன்று புதன்கிழமை (ஜூலை 29) காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Ad banner

10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 5 தனிப்படைகளாகப் பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள மண்மங்கலம் அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக இல்லம்

மூர்த்திப்பாளையம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி இல்லம்.

திமுக தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளரான கோயம்பள்ளி பாஸ்கரன் இல்லம்.

கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள தொழிலதிபர் ரமேஷ் (சக்தி எஸ். கார்த்தி நிறுவன அதிபர்) இல்லம்.தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் (TASMAC) மாவட்ட மேலாளர் அலுவலகம். ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்ற வருகிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் எழுந்த பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை (IT) மற்றும் அமலாக்கத்துறை (ED) சோதனைகள் நடைபெற்றிருந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் களமிறங்கியுள்ளது கரூர் மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுப்பட்டு, தீவிர ஆவணச் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.