Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி : என்ன மாதிரியான தலைவர்கள் நம்மல ஆண்டாங்க. இப்ப ரீல்ஸ் மோகத்துல போய்ட்டு இருக்காங்களே சார்? என்று இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கூறிய பரபரப்பு வீடியோ.

0

'- Advertisement -

Ad banner

தமிழக சட்டசபையில் நடந்ததை படமா எடுத்து போடுறாங்க.. என்ன மாதிரியான தலைவர்கள் நம்மல ஆண்டாங்க. இப்ப ரீல்ஸ் மோகத்துல போய்ட்டு இருக்காங்களே சார்? என்று இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கூறினார். இதனை கவனமாக கேட்ட அன்பில் மகேஷ், ‘உங்களுடைய ஆதங்கம் நியாயமானது. சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் இளைஞர்களும் நமது பிள்ளைதான். அவர்களுக்கு பண்பாட்டையும் சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் எடுத்துச் சொல்லி, அன்போடு திருத்துவோம்’ என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பொன்மலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்த போது இளம்பெண் நிர்வாகி ஒருவரின் பேச்சு அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது.

அந்த இளம்பெண் பேசும் போது, “இன்றைய டிஜிட்டல் உலகில் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பலரும் ‘ரீல்ஸ்’ என்ற பெயரில் சமூக ஊடகங்களில் கிண்டலாகவும், விளையாட்டுத்தனமாகவும் பகிர்ந்து வருகிறார்கள். இது என்ன மாதிரியான நாகரிகம்? இதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது

திறமையான ஆளுமைகளும், மாபெரும் தலைவர்களும் கண்ணியம் காத்த தமிழகச் சட்டமன்றம் இது. தமிழ் சங்கங்கள் தாங்கிப்பிடித்த நமது பாரம்பரிய தமிழ் சமூகம், வெறும் ‘ரீல்ஸ்’ மோகத்திற்காக இப்படி தரம் தாழ்ந்து போகலாமா?” என உணர்ச்சி வசப்பட்டு பேசியதோடு கண்கலங்கினார்.திமுக பெண் நிர்வாகியின் இந்த பேச்சு அங்கிருந்தவர்களை உலுக்கியது. பெண் நிர்வாகி பேசியதால் சில வினாடிகள் அங்கு நிசப்தம் நிலவியது. உடனடியாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறும் வகையில் பேசினார்.அன்பில் மகேஷ் பேசும் போது, “அழ வேண்டாம்… உங்களுடைய ஆதங்கம் நியாயமானது. சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் இளைஞர்களும் நமது பிள்ளைதான். அவர்களுக்கு பண்பாட்டையும், சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் எடுத்துச் சொல்லி, அன்போடு திருத்துவோம்’ என்று கூறினார்.

 

தமிழக முதல்வர் விஜய் சட்டசபைக் கூட்டத்தொடரின் போது அப்பாவ காணோம் என்று சொல்லியதோடு, பினிஷ்டு என்பதை காண்பிக்கும் வகையில் சைகை காட்டியிருந்தார். அந்த சைகையினை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என விஜய் ரசிகர்கள் டிரெண்ட் ஆக்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திலும் அந்த சைகை இடம்பெற்றிருந்தது.குறிப்பாக டைட்டில் கார்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி விஜய் என வரும் போது விஜய் சட்டசபையில் செய்து காட்டிய சைகை இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் இளம்பெண் ஒருவர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் இதனை எடுத்துக் கூறி வருத்தப்பட்டது தற்போது வெறும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.