
திருச்சி சுப்ரமணியபுரத்தில் பெண் மாயம் கணவர் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார்.
திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரை சேர்ந்தவர் ஜாக்சன் ஜோசப் (வயது 50) இவரது மனைவி மேரி டயானா (வயது 42) கடந்த ஆண்டு இவர் விபத்தில் சிக்கி அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் மேரி டயானா தனது கணவருக்குத் தெரியாமல் தங்க நகைகளை அடமானம் வைத்து உள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த 16-ந்தேதி மேரி டயானா தனது வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்று உள்ளார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் என எங்கு தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து ஜாக்சன் ஜோசப் கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கேகே நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

