
திருச்சியில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, “திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருப்பதால் மேற்கண்ட நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் செல்லும் இடங்களானமத்திய சிறைச்சாலை,
சுந்தரராஜநகர் புதியது,
சுந்தரராஜநகர் பழையது,
ஜே.கே.நகர்,
செம்பட்டு,
காஜாமலை பழையது,
ரெங்கா நகர்,
சுப்ரமணிய நகர் புதியது,
வி.என்.நகர் புதியது,
தென்றல் நகர் புதியது,
கவி பாரதி நகர்,
காமராஜ் நகர்,
கிராப்பட்டி புதியது,
கிராப்பட்டி பழையது,
அன்பு நகர் பழையது,
அன்பு நகர் புதியது,
எடமலைப்பட்டி புத்தூர் புதியது,
பஞ்சப்பூர்,அம்மன் நகர்,
தென்றல் நகர் இ.பி.காலனி,
அரியமங் கலம் கிராமம்,
மலையப்ப நகர் புதியது,
மலையப்ப நகர் பழையது,
ரயில் நகர் புதியது,
ரயில் நகர் பழையது,
முன்னாள் ராணுவத்தினர் காலனி புதியது,
முன்னாள் ராணுவத்தினர் காலனி பழையது,
மேல கல்கண்டார் கோட்டை செக்ஸன் ஆபீஸ்,
மேல கல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி,
மேல கல்கண்டார் கோட்டை நூலகம்,
பொன்னேரிபுரம் புதியது,
பொன்னேரிபுரம் பழையது,
அம்பேத்கார் நகர்,
விவேகானந்த நகர்,
எல்.ஐ.சி. புதியது,
விஸ்வநாதபுரம்,
கே. சாத்தனூர்,
தென்றல் நகர்,
ஆனந்த நகர்,
சுப்ரமணிய நகர்,
சத்தியவாணி கே.கே.நகர்,
அம்மா மண்டபம்,
ஏ.ஐ.பி.இ.ஏ.நகர்,
பாலாஜி அவென்யூ,
தேவி பள்ளி,
மேலூர்,
பெரியார் நகர்,
திருவானைக்காவல்,
தேவதானம்,
விறகுப்பேட்டை,
மகாலட்சுமி நகர்,
சங்கிலியாண்டபுரம்,
கல்லுக்குழி,
அரியமங்கலம் உக்கடை,
தெற்கு உக்கடை,
ஜெகநாதபுரம்ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீர் வினியோகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படும். 20-ந்தேதி திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

