Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டெல்டாவில் முதன்முறையாக திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அதிநவீன நீ யூரோ நேவிகேஷன் சிஸ்டம். அறிமுகம்

0

'- Advertisement -

Ad banner

திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அதிநவீன ‘நியூரோ நேவிகேஷன் சிஸ்டம்’ அறிமுகம்.

​டெல்டா பகுதியில் முதன்முறையாக மேம்பட்டக ‘ஸ்ட்ரோக் கமாண்ட் சென்டர் தொடக்கம்.

​திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை அறுவை சிகிச்சைத் துறையில் புதிய மைல் கல்லாக, திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களிலேயே முதன்முறையாக அதிநவீன ‘நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட சி.டி. பெர்ஃப்யூஷன் தொழில் நுட்பத்துடன் கூடிய ‘ஸ்ட்ரோக் கமாண்ட் சென்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

​இதன் தொடக்க விழா

திருச்சி அப்போலோ மருத்துவமனை வளாகத்தில்

வியானன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் மற்றும் அசோசியேட் துணைத் தலைவர் ஜெயராமன் கலந்துகொண்டு, இந்த அதிநவீன வசதிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

 

முன்னதாக, திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையின் மெடிக்கல் சூப்பரிண்டெண்டண்ட் டாக்டர் ஸ்ரீவித்யா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

​டாக்டர் சையத் அலி எஸ். (நியூரோ சர்ஜன்) பேசும்போது கூறுகையில்:

நியூரோ நேவிகேஷன் சிஸ்டம்’ என்பது மூளை மற்றும் தண்டுவடம் சார்ந்த அறுவை சிகிச்சைகளை மிகவும் துல்லியமாக மேற்கொள்ள உதவும் ஒரு நவீன வழிகாட்டுதல் தொழில் நுட்பமாகும்.

​ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் போன்று செயல்படும் இந்த அமைப்பு, நோயாளியின் அறுவை சிகிச்சைக்கு முன்பு எடுக்கப்பட்ட சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் படங்களை ஒருங்கிணைக்கிறது. அறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் மூளை மற்றும் தண்டுவடத்தின் தற்போதைய நிஜமான அமைப்பை ஸ்கிரீனில் காட்டி, அறுவை சிகிச்சை நிபுணர்கள் மிகத் துல்லியமாகச் செயல்பட வழிகாட்டுகிறது.

​இதன் மூலம் மூளைக் கட்டிகளை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து, சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்குப் பாதிப்பின்றி பாதுகாப்பாக அகற்ற முடிகிறது.

​ மூளையின் மிக முக்கியமான செயல்பாட்டுப் பகுதிகளைப் பாதுகாத்து அறுவை சிகிச்சை செய்ய உதவுகிறது. மண்டையோட்டு அடிப்பகுதி மற்றும் தண்டுவடத்தில் உள்ள மிகச் சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் அதிக பாதுகாப்புடன் மேற்கொள்ளலாம். அறுவை சிகிச்சைக்கான சரியான பாதை, கோணம் மற்றும் ஆழத்தைத் துல்லியமாகக் கணிப்பதால், நோயாளிகளுக்கு ரத்த இழப்பு மற்றும் பாதிப்புகள் குறைந்து, அவர்கள் விரைவாகக் குணமடைய வழிவகுக்கிறது.

​திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் இந்த மேம்பட்ட நரம்பியல் சேவைகளை வழங்குவதற்காக, நரம்பியல் துறைச் சிறப்பு மருத்துவக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். டாக்டர் எஸ். ஃபசல் இலாஹி (இண்டர்வென்ஷனல் நியூராலஜிஸ்ட்) பேசுகையில்: பக்கவாதம் என்பது ஒரு மருத்துவ அவசர நிலையாகும். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, ‘பொன்னான நேரம்’ (Golden Hour) எனப்படும் முதல் நான்கரை மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை அளித்தால் நோயாளிகளைப் பக்கவாத பாதிப்பிலிருந்து முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

பக்கவாதத்திற்கான அறிகுறிகளை ‘FAST’ என்ற எளிய வழிமுறை மூலம் நாம் எளிதில் கண்டறியலாம்: ​ முகக்கோணல்: திடீரென வாய் ஒருபுறமாக கோணிப்போதல். A கைகளின் பலவீனம்: திடீரென ஒரு பக்கக் கை அல்லது கால் செயலிழப்பது போன்ற பலவீனம் ஏற்படுதல்.பேச்சு குளறுதல்: பேசுவதில் திடீர் தடுமாற்றம் அல்லது பேச்சு குளறுதல் ஏற்படுதல். தடுமாற்றம், மங்கலாக அல்லது இரட்டையாக தெரிதல்  மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், சிறிதும் தாமதிக்காமல் உடனடியாகப் பக்கவாத சிகிச்சைக்கான வசதிகள் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பக்கவாத சிகிச்சையில் ஒவ்வொரு நொடியும் முக்கியம். ஏனெனில், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது, ஒவ்வொரு நிமிடமும் பல மில்லியன் மூளைச் செல்கள் அழியத் தொடங்குகின்றன. பக்கவாத அறிகுறிகள் தோன்றிய நான்கரை (4.5) மணி நேரத்திற்குள் (Golden Hour) நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு வர வேண்டும். இந்த விண்டோ பீரியட் எனப்படும் காலகட்டத்திற்குள் கொண்டு வரப்படும் நோயாளிக்கு, மூளையில் உள்ள சிறிய இரத்தக் குழாய் அடைப்புகளைக் கரைக்கக்கூடிய ‘ஐ.வி த்ராம்போலிசிஸ் ஊசி சிகிச்சை அளிக்கப்படும். இரத்தக் குழாயில் பெரிய அடைப்பு இருந்தால், இருதய சிகிச்சையைப் போன்றே கேத் லேப் மூலம் அடைப்பை நீக்கி, தேவைப்பட்டால் ஸ்டென்ட் வைக்கப்படும்.அதிநவீன ‘கமாண்ட் சென்டர்’ மற்றும் ‘சிடி பெர்ஃப்யூஷன்’ தொழில்நுட்பம் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் பக்கவாத நோயாளிகளைக் கண்காணித்துச் சிகிச்சையளிக்க ‘கமாண்ட் சென்டர் செயல்பட்டு வருகிறது.

அவசர உதவி எண்ணிற்கு (1066) அழைப்பு வந்ததும், ஆம்புலன்ஸில் உள்ள ஜி.பி.எஸ் மூலம் நோயாளி வரும் தூரம் கண்காணிக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே அவசரச் சிகிச்சை பிரிவு தயார் நிலைக்குக் கொண்டுவரப்படும். நோயாளி வந்த 5 நிமிடங்களில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டு, 10 முதல் 15 நிமிடங்களுக்குள் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்கிவிடுவர். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘சிடி பெர்ஃப்யூஷன்’ மென்பொருள் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் மூளையின் எந்தப் பகுதியில் இரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது? இரத்தக் கசிவு ஏதேனும் உள்ளதா? ​மூளையின் எந்தெந்தப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன, இன்னும் காப்பாற்றக்கூடிய நிலையில் உள்ள செல்கள் எவை? போன்ற அனைத்துத் துல்லியமான தரவுகளும் உடனடியாக மருத்துவர்களின் கைபேசி அல்லது கணினிக்கு வந்துவிடும். இது மருத்துவர்கள் விரைந்து முடிவெடுக்க பெரிதும் உதவுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக, திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களிலேயே இந்த ‘சிடி பெர்ஃப்யூஷன்’ தொழில்நுட்பம் திருச்சி அப்போலோவில் மட்டுமே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருங்கிணைந்த பக்கவாத சிகிச்சை மையம்  பக்கவாத சிகிச்சையைப் பொறுத்தவரை, அது ஒரு கூட்டு முயற்சியாகும்.

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் நிபுணர், அவசரச் சிகிச்சை நிபுணர், கதிரியக்க நிபுணர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பிரத்யேக பக்கவாத தீவிரச் சிகிச்சை பிரிவு ஆகிய அனைத்து வசதிகளும் ஒரே கூரையின் கீழ் அமைந்துள்ளன. மக்களுக்கு 24 மணி நேரமும் அதிநவீன பக்கவாத சிகிச்சை அளிக்கத் திருச்சி அப்போலோ மருத்துவமனை எப்பொழுதும் தயாராக உள்ளது என்றார். டாக்டர் மயிலன் சின்னப்பன் (நியூரோ சர்ஜன்)பேசுகையில்: பொதுவாக மூளை அல்லது தண்டுவடம் சார்ந்த அறுவை சிகிச்சை என்றாலே நோயாளிகளுக்குப் பல்வேறு அச்சங்கள் ஏற்படுவது இயல்பு. தண்டுவடம் அறுவை சிகிச்சைக்குப் பின் கால்களில் பலவீனம் அல்லது பக்கவாதம் ஏற்படுமா?” ​”மூளையில் உள்ள கட்டியை அகற்றிய பிறகு பேச்சுத்திறன் பாதிக்குமா அல்லது கை, கால்கள் செயல் இழக்குமா?” போன்ற கேள்விகளே நரம்பியல் வெளிப்புற நோயாளி பிரிவில் தினமும் முன்வைக்கப்படுகின்றன.இத்தகைய அச்சங்களுக்குப் முற்றுப்புள்ளி வைப்பதுதான் இந்த ‘நியூரோ நேவிகேஷன்’ தொழில்நுட்பம். மூளையிலோ அல்லது தண்டுவடத்திலோ கட்டி இருக்கும் இடத்தை இந்தத் தொழில்நுட்பம் மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. இதனால், கட்டியைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான நரம்புகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல், குறிப்பிட்ட அந்தப் பகுதியை மட்டும் இலக்காகக் கொண்டு அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. இதன் மூலம், தவிர்க்க முடியாத நரம்புச் சேதங்கள் முற்றிலும் தவிர்க்கப்படுகின்றன. ​பக்கவாத நோயாளிகளுக்கு அவசர காலங்களில் விரைந்து சிகிச்சை அளிப்பதற்காக இந்த மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலாண்மைக் குழுவின் முழு ஆதரவோடு, சிடி பெர்ஃப்யூஷன் உள்ளிட்ட நவீன பரிசோதனை வசதிகள் இங்கு உள்ளன.

​பொதுவாக, இதய சிகிச்சை பிரிவில் அவசரத் தேவைக்காக ஒரு ‘கேத் லேப்’ இருப்பது வழக்கம். ஆனால், இங்கு நரம்பியல் அவசரச் சிகிச்சைகளுக்காகவே எந்நேரமும் இயங்கக்கூடிய இரண்டு அதிநவீன கேத் லேப் வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

​இதன் மூலம், மாரடைப்பு வந்த நோயாளிகளுக்கு உடனடியாக ‘ஸ்டென்ட்’ வைக்கப்படுவது போல, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கும் தாமதமின்றி கேத் லேப் மூலம் தகுந்த நரம்பியல் சிகிச்சைகளை உடனடியாக வழங்க முடியும்.

​திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு விரிவான மற்றும் உலகத்தரம் வாய்ந்த நரம்பியல் சிகிச்சைகளைத் தொடர்ச்சியாக வழங்குவதே இந்த மையத்தின் முதன்மை நோக்கமாகும் என்றார்.

 

​டாக்டர் செந்தில் குமார் (நியூரோ சர்ஜன்) பேசுகையில்

மூளை முடக்குவாதம் ஏற்படுவதற்கு முன்னதாகத் தோன்றும் தற்காலிக அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

​மனிதர்களுக்கு திடீரென ‘டி.ஐ.ஏ’ எனப்படும் தற்காலிக மூளை முடக்குவாத அறிகுறிகள் ஏற்பட்டு, பின்னர் அவை தானாகவே சரியாகிவிடக்கூடும். அவ்வாறு அறிகுறிகள் மறைந்துவிட்டதால் ஆபத்து நீங்கிவிட்டதாகக் கருதி அலட்சியமாக இருக்கக் கூடாது.

​இந்தத் தற்காலிக பாதிப்பானது, எதிர்காலத்தில் தீவிரமான மூளை முடக்குவாதம் வரப்போவதைக் குறிக்கும் ஒரு முன்னெச்சரிக்கை எச்சரிக்கை மணியாகும்.

​எனவே, தற்காலிகமாக அறிகுறிகள் தோன்றி மறைந்தாலும், உடனடியாக நரம்பியல் நிபுணரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பாதிப்பின் தீவிரத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ப தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் பெரிய அளவில் மூளை முடக்குவாதம் ஏற்படுவதைத் தடுத்து உயிரைக் காக்க முடியும் என்றார்.இந்த நிகழ்வில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 14 வயது சிறுமி தான் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் பூரண குணம் பெற்றதாக கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.