
திருச்சியில் அரசு பேருந்து டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், மகனுடன் கைது.
திருச்சி மாவட்டம் துறையூர் ரெட்டிபட்டி குறும்பர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 41 )அரசு பேருந்து டிரைவர் கடந்த பத்தாம் தேதி இவர் ஓலையூர் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மத்திய பேருந்து நிலையம் நோக்கி வந்தார் பேருந்தில் அருண்குமார் நடத்துனராக செயல்பட்டு வந்தார். கேகே நகர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தினர். அப்போது சாலையில் பாதை விடுவது சம்பந்தமாக அந்த வழியாக வந்த தனியார் நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநர் மற்றும் சிவக்குமார் இடையே தகராறு ஏற்பட்டது இதில் அந்த தனியார் பஸ் ஓட்டுநர் மற்றும் அவரது மகன் ஆகியோர் சேர்ந்து சிவக்குமாரை தாக்கினர் இதுகுறித்து கே.கே . நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த தனியார் நிறுவன பேருந்து ஓட்டுனர் கே.கே. நகர் உடையான் பட்டியை சேர்ந்த கனகராஜ் (வயது 40) என்பவரையும் அவருடன் பஸ் டிரைவரை தாக்கிய அவரது மகன் கார்த்திகேயன் (வயது 20) ஆகிய இரண்டு பேரைையும் கேகே நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

