Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு.

0

'- Advertisement -

Ad banner

பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் மாநகராட்சி கமிஷனிடம் புகார் மனு.

திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆர்.காளிமுத்து தலைமையில், செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் பொருளாளர் பி. கே. ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூராக ரோட்டின் இருபுறமும் நடை மேடை பாதையில் தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் பெருகிக்கொண்டு வருவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூராக கடைகள் பெருகிக்கொண்டே வருகின்றது. அதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அதுசமயம் எங்கள் அனைத்து கடை அருகிலும் தள்ளுவண்டி கடைகள், தரைகடைகள் பெருகி கொண்டே வருகின்றது. அதுசமயம் வியாபரிகள் அனைவரும் அவரவர் கடைகளுக்கு அளவீடு முத்திரை, தொழில் வரி, உணவுப் பொருள் விற்பனை உரிமம் போன்ற சட்டப்படியான வரிகள் அரசு மற்றும் மாநகராட்சிக்கு செலுத்தி மிகுந்த சிரமத்துடன், கடை நடத்தி வருகிறோம். இப்போது புதிதாக புத்தூர் மந்தை முதல் உறையூர் குறத்தெரு வரையிலும் மற்றும் ராமலிங்கநகர் பூங்கா பகுதி அருகில், குமரன் நகர் குறுக்கு தெருக்கள், சண்முகா நகர் குறுக்கு தெருக்கள், இரட்டை வாய்க்கால் பகுதி போன்ற அனைத்து பகுதிகளிலும் தள்ளுவண்டி கடைகள் பெருகி வருகின்றது. ஆகையால் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.