Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த இருநாள் கருத்தரங்கம்

0

'- Advertisement -

Ad banner

செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்த இருநாள் கருத்தரங்கம் .

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆய்வு வணிகவியல் துறை புதுடெல்லி இந்திய உலக விவகார கவுன்சிலுடன் இணைந்து இந்தியாவின் முக்கிய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள்: அண்டை நாடுகள், பரந்த பிராந்தியங்கள் மற்றும் உலகளாவிய மாற்றங்கள் என்ற பொருண்மையில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. ஐ.நா சபையில் இந்தியாவின் முன்னாள் நிரந்தர பிரதிநிதியும் ஐஐடி சென்னை தனிச்சிறப்பு பேராசிரியருமான டி.எஸ் திருமூர்த்தி தொடக்க உரையாற்றியாற்றினார். “மாறிவரும் உலகில் வழிசெலுத்துதலும் இந்தியாவின் பங்கும்” என்ற தலைப்பில் இந்தியாவின் தலைமைத்துவம், ஆபரேஷன் சிந்தூர், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, வெளியுறவுக் கொள்கைகள் குறித்து உரையாற்றினார். ஐசிடபிள்யூஏபுது டெல்லியின் ஆய்வு அலுவலர் முனைவர் தேஷு சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஐசிடபிள்யூஏவின் பங்களிப்பு குறித்து விளக்கினார்.

செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையுரை ஆற்றினார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் மற்றும் கல்லூரி முதல்வர் அருட்தந்தை கு. அஆரோக்கியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இத்தகைய கருத்தரங்கின் பேச்சாளர்களாக, புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், திருச்சூர் அமலா மருத்துவ அறிவியல் நிறுவனம், குஜராத் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம், சென்னை லயோலா கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்று உரையாற்றினர். நிறைவு விழாவில் துணை முதல்வர் அருள்முனைவர் அருள் ஒளி பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார். இக்கருத்தரங்க அமைப்பாளராக முனைவர் பாஸ்டின் ஜெரோம் வழிநடத்தினார். முனைவர் அருள்தாஸ் நன்றியுரை ஆற்றினார். பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு அறிஞர்கள், மாணவர்கள் என 246 பங்கேற்று பயன் பெற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.