Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ; பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபருக்கே மன உளைச்சலா?

0

'- Advertisement -

திருச்சியில் பாதிரியார் பயிற்சி பெற்ற வாலிபருக்கே மன உளைச்சலா?

Ad banner

உடலை கைப்பற்றி கே.கே. நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை.

திருச்சியில் பாதிரியாராக பணியாற்ற பயிற்சி பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி சேர்ந்தவர் ஜஸ்டின் பிரபாகரன் (வயது 29). இவர் திருச்சி கே.கே நகர் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதிரியாராக பணியாற்ற விரும்பி வந்து உள்ளார் . இந்த நிலையில் அவர் பல்வேறு மாநில தலைநகரங்களில் அதாவது கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களில் பாதிரியார் பயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று ஜஸ்டின் பிரபாகர் பெங்களூருவில் இருந்து உடல் பரிசோதனை செய்து கொண்டு திருச்சி வந்து உள்ளார் . அப்போது முதல் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜஸ்டின் பிரபாகர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே கே நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்ச்சுக்கு வரும் பொது மக்களுக்கு மன அமைதிக்கு பிரார்த்தனை செய்யும் பாதிரியார்க்கே மன உளைச்சலா?

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.