Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியா ? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் கண்டனம்..

0

'- Advertisement -

Ad banner

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியா? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் கண்டனம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில  பொருளாளர் சே நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2 கட்டங்களாக நடைபெற உள்ளது  முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்புப் பணி வருகிற ஆக. 1 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் பெரும்பான்மையாக ஆசிரியர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதற்கான 3 நாள் பயிற்சி களுக்கான ஆணை, செல்போன்களில் குறுஞ்செய்தி வாயிலாகவும், நேரடியாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இது போன்ற பணிகளில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக் கூடாது என்ற விதிகள் இருக்கும் போது அதை புறந்தள்ளி

இப்பணி வழங்கப்பட்டுள்ளது கட்டணத்துக்குரியது.

மேலும் சில பள்ளிகளில் 100 சதவீத ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிப் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

இதனால் மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் 55 வயதை கடந்த ஆசிரியர்களுக்கும் பணிகள் வழங்கப்பட்டுள்ளது

மேலும் எஸ் ஐ ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும் கூடுதலாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளையும் வழங்குவதால் பனிச்சுமை ஏற்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி பாதிக்கப்படும்

எனவே மேற்கண்ட குறைகளை களைய திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையரை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சிராப்பள்ளி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.