Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தவெக கொடி வர்ணத்தில் ரிப்பன் வெட்டி பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்த அமைச்சர்.வருங்காலத்தில் பேருந்துகளையும் கொடி நிறத்தில் மாற்றி விடுவார்களா என பொதுமக்கள் அச்சம்.

0

'- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் பேருந்து வழித்தடத்தை நீட்டித்து ஆதனக்கோட்டை, கருப்புடையான்பட்டி வழியாக அண்டக்குளம், கூத்தாச்சிபட்டி, பெருங்களூர், இச்சடி வழியாக செல்லக்கூடிய பேருந்தை புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ முத்துராஜா, கலெக்டர் அருணா ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் முகமது பர்வேஸ் நேற்று தொடங்கி வைத்தார்.

 

Ad banner

அதற்கு முன் பேருந்தில் கட்டப்பட்டிருந்த ரிப்பன் தவெக கொடி வண்ணத்தில் இருந்ததால் திமுக எம்எல்ஏ மற்றும் கலெக்டர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து கட்சிக்கொடி வண்ணத்தில் இருந்த ரிப்பன் மாற்றப்பட்டதும் அமைச்சர் பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

TVK ad

முன்னதாக இலுப்பக்குடி பட்டியில் பேருந்து வழித்தட நீட்டிப்பு வசதியை அமைச்சர் முகமது பர்வேஸ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அந்த பேருந்தில் கட்டப்பட்டிருந்த ரிப்பனும் தவெக கொடி வர்ணத்தில் இருந்த நிலையில் அப்படியே தொடங்கி வைத்தார் அமைச்சர் .

இதனை போக்குவரத்து அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை,

இந்த ஆட்சியில் இப்படியே தொடர்ந்து நடந்தால் வருங்காலத்தில் அரசு பேருந்துகளும் தமிழக வெற்றிக்கழக கட்சிக் கொடி நிறத்தில் மாற்றி விடுவார்கள் என அப்பகுதி மக்கள் கிண்டல் அடித்து பேசியவாறு சென்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.