திருச்சியில் அதிமுகவில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

திருச்சியில் அ.தி.மு.க.விலிருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

திருச்சி கிழக்கு தொகுதி, 17-வது வட்ட அ.தி.மு.க வட்டச் செயலாளர் சிங்கமுத்து தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் அக்கட்சியிலிருந்து விலக முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் அனைவரும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தங்களை அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
மாற்றுக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தவர்களை, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் முன்னாள் பள்ளிக்கு வீட்டில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பொன்னாடை அணிவித்து முறைப்படி அனைவரையும் வரவேற்றார்.
இந்த இணைவு விழாவின் போது தி.மு.க முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்:
மாநகரக் திமுகச் செயலாளர் மு. மதிவாணன் பகுதி செயலாளர் பாபு வட்ட செயலாளர்கள் மனோகர், சுப்பிரமணி மற்றும் ஏராளமான தி.மு.க கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

