கருமண்டபம் பத்மநாதன் ஏற்பாட்டில் திருச்சி வடக்கு மற்றும் மாநகர அதிமுக முக்கிய நிர்வாகிகள் வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் முன்னிலையில் தவெக வில் இணைந்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை இரு மொழிக்கொள்கைதான் : விஜய்யின் வெற்றிக்கு திமுக வே காரணம் வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் பேட்டி.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு. ப. கிருஷ்ணன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
சட்டமன்ற தேர்தல் தோல்விக்காக அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வு குழு, விஜய் அலையை கணிக்க தவறியதே தோல்விக்கு காரணம் எனக் கூறியுள்ளது.
1967-ல் அண்ணா ஆட்சியைப் பிடித்த போது இந்த வெற்றிக்கு யார் காரணம் என நிருபர்கள் கேட்டதற்கு காங்கிரஸுக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும் என கூறினார் அதேபோல இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதற்கு திமுக தான் காரணம்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் கட்சி தொடங்குவதாக கூறியுள்ளனர். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.
மாப்பிள்ளை இவர்தான் என தெரிகிறது ஆனால் அவர் அணிந்திருக்கும் சட்டை யாருடையது என தெரிய வேண்டும் அதை அவர்கள் சொல்லட்டும்.
அண்ணா கொண்டு வந்த இரு மொழிக் கொள்கையை தான் தமிழக வெற்றி கழகமும் பின்பற்றும்.இது தொடர்பாக நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் விளக்கமாக பேசியுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பொருத்தமட்டில் எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம், அதற்காக முதலமைச்சர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
எம்மதமும் சம்மதமே எங்கள் தலைவரின் கொள்கை அதனால்தான் அவர் மசூதிக்கும் செல்கிறார் தேவாலயத்துக்கும் செல்கிறார் இப்போது மூகாம்பிகை தரிசிக்க சென்றுள்ளார். இவர் அவர் கூறினார்.
பேட்டியின் போது நிர்வாகிகள் பத்மநாதன், நாகநாதர் பாண்டி, ரஜினிகாந்த், ஏர்போர்ட் விஜி, உஸ்மான் பாபு, தென்னூர் ராஜா,,வக்கீல் முல்லை சுரேஷ், வழக்கறிஞர் பொன்முருகன்,வரகனேரி அரசு, விஷன் பழனிச்சாமி, புத்தூர் சதீஷ்குமார், மணிகண்டன் அற்புதராஜ், மேகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் அற்புதராஜ் தலைமையிலும், புத்தூர் சதீஷ்குமார் தலைமையிலும் ஏராளமான நிர்வாகிகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தவெக நிர்வாகி பத்மநாதன் ஏற்பாட்டில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

