திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முசிறி ஆயுள் தண்டனை கைதி சாவு
திருச்சி மாவட்டம் முசிறி திருப்பஞ்சலி பகுதியை சேர்ந்தவர் உத்தண்டன் (வயது 77) இவர் ஆயுள் தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறையில் கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் சர்க்கரை நோய் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து
முத்தையன் உடல் நலக்குறைவால் கடந்த 28ந் தேதி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரி ராஜேஷ் கண்ணா திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் இடம் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெ.எம் 4. நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.

