முன்னாள் ராணுவ வீரர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய திருச்சி ரயில்வே அதிகாரி

ரங்கசாமியின் மகன் புண்ணியமூர்த்தி என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் திருச்சி ரயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 23/5/2026 அன்று காலை சுமார் 10.30 மணி அளவில், புண்ணியமூர்த்தி பணியில் இருந்தபோது அங்கு வந்த முன்னாள் திருச்சி ரயில்வே அதிகாரி பெருமாள் நந்தலால் (Sr.DEN/Coordinaton/Trichy)
புண்ணியமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தரக்குறைவாக பேசியதோடு மட்டுமல்லாமல், அவரை கடுமையாக தாக்கியுள்ளார். தான் அடித்ததையும் முன்னாள் ராணுவ வீரரை கீழே தள்ளியதையும், CCTV இல் பதிவாகி இருப்பதைக் கண்ட பெருமாள் நந்தலால், அந்த சம்பவம் தொடர்பான, சுமார் 14 வினாடிகளுக்கான CCTV footage யும் , அழிக்கும்படி செய்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான புண்ணியமூர்த்தி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி கன்டோன்மென்ட் காவல்துறையினர், அரசு மருத்துவமனைக்கு சென்று, 23/5/2026 பிற்பகல் சுமார் 1.30 மணி அளவில், புண்ணியமூர்த்தி இடம் நடந்த சம்பவங்கள் குறித்து எழுதி வாங்கியுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை ( 2/6/2026) அன்று
பெருமாள் நந்தலால் மீது தான் அளித்த புகார் குறித்து விவரம் விவரம் அறிய
கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு புண்ணியமூர்த்தி சென்றுள்ளார்.
காவல்துறையினர் பெருமாள் நந்தலாலுக்கு, அலைபேசி மூலம் அழைத்தபோது தான் சென்னையில் இருப்பதாக கூறியுள்ளார். இந்த புகார் குறித்து பெருமாள் நந்தலாலிடம் நேரில் விசாரித்த பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். பெருமாள் நந்தலால் திருச்சி கோட்டத்தில் இருந்து பல்வேறு புகார்களின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, பல விதங்களிலும் இந்த புகாரை பதிவு செய்ய விடாமல் தடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகார் விஸ்வரூபம் எடுப்பதை அறிந்து அவர் சென்னைக்கு தப்பி ஓடி இருப்பதாக தெரிய வருகிறது.

