Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

10ம் வகுப்பு பொது தேர்வில் திருச்சி புனித அன்னாள் பெண்கள் மேல்நிலை பள்ளி 100 சதவீத தேர்ச்சி. மாநில அளவில் 4ம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு.

0

'- Advertisement -

10ம் வகுப்பு பொது தேர்வில் திருச்சி புனித அன்னாள் பெண்கள் மேல்நிலை பள்ளி 100 சதவீத தேர்ச்சி.

Ad banner

மாநில அளவில் 4ம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு.

புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலப்புதூர் திருச்சியில் கடந்த 2025-26ம் கல்வியாண்டில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்

100% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை முன்னிட்டு பள்ளியில் முதலிடமும் மாநில அளவில் 500க்கு 496 என்ற சிறந்த மதிப்பெண்கள் பெற்ற திருச்சி மார்சிங்பேட்டை அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்த நெல்சன் ரெக்ஸி அவர்களின் மகள் மாணவி கேத்ரின் ரென்ஸி

மற்றும் பள்ளியில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி சே.கனிஷ்கா 494/500 மற்றும் பள்ளியில் மூன்றாம் இடம் பெற்ற மாணவி

ர. தேவ தர்ஷினி 488/500 மாணவிகளை பாராட்டி பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை அருட் சகோதரி நா. கிரேஸ் மேரி அவர்கள் பொன்னாடை போர்த்தி , இனிப்புகள் மற்றும் பரிசுகள் தந்து பாராட்டியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் 100% தேர்ச்சி விழுக்காட்டிற்காக கடினமாய் உழைத்த அருட் சகோதரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.