பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மின் வாரியம் தரப்பில் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். அதன்படி திருச்சி மாவட்டத்தில் நாளை (19.05.2026) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் கல்லக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 19.05.2026 (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணணூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆம ரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், வந்த லைக்கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆ.மேட்டுர், நத் தம், திருமாங்குடி, டி.கல்விகுடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரி யூர், கல்லகம், கீழரசூர் மற்றும் புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது. அதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ஏப்ரல் மாதத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்றது . பிள் தமிழக சட்டப்பேரவைக்காக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக மின் நிலையங்கள், துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.
கோடை காலங்களில் தற்போது மின் நுகர்வு அதிகமாக இருக்கிறது.கோடை வெப்பத்தை தவிர்க்க பலரும் வீடுகளில் மின்விசிறி, ஏர் கூலர்கள், ஏசி ஆகியவற்றை பயன்படுத்துவதால் தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. பல இடங்களில் அறிவிக்கப்பட்டாத மின் வெட்டுகள் நிலவுகிறது. திருச்சி உள்ளிட்ட நகரப்பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி 10 முதல் 15 நிமிடங்கள் வரை மின் தடை செய்யப்படுகிறது.
கிராமப்பகுதியில் சொல்லவே தேவையில்லை. பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிகமாக மின் சாதனங்களை பயன்படுத்துவதால் சில இடங்களில் ஃபீடர்கள் ட்ரிப் ஆகின்றன அதனை சரிசெய்யும் போது மின் தடை ஏற்படுகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை எல்லாம் முடிந்த நிலையில் தற்போது மின்வாரியம் தரப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

