Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் குடிபோதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை.

0

'- Advertisement -

திருச்சியில் குடி போதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை.

Ad banner

இது குறித்து கோட்டை காவல் நிலையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஜான் தோப்பு இபி ரோடை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). இவர்

பிரபல தனியார் விற்பனை நிலையத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் மேலும் இவருக்கு கிட்னி மற்றும் இதய நோய் பாதிப்பு இருந்து உள்ளது . கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்ட சுப்ரமணியன் கடந்த எட்டாம் தேதி திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இதுகுறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.