திருவானைக்காவல் ஓரின சேர்க்கை ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கொலை. 2 சிறுவன் உள்பட 5 பேர் கைது. சிறுவன் தலைமறைவு.

திருவானைக்காவல் தாகூர் தெருவில் வசிப்பவர் வேம்படியான் இவரது மகன் வினோத்குமார் (வயது 35) இவர் மாற்றுத்திறனாளி திருவானைக்கா கோயிலில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது . கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாகூர் தெருவில் உள்ள செங்கல் சூளையின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் 3 இளம் சிறார்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் பைவ்(வயது 21 )ராகுல் வயது (வயது 23 )ஸ்ரீதர் (வயது 20) ஆகியோர் காவிரியில் குளித்துவிட்டு அந்தப் பகுதியை கடந்த போது முனகல் சத்தம் கேட்டுள்ளது. அங்கே சென்று பார்த்த போது வினோத்குமார் இளம் சிறாறுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளார், இதை பார்த்து அவர்கள் மூவரும் வினோத்குமாரை தாக்கி திட்டி உள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ரூபாய் 50 ஆயிரத்தை பிடுங்கி உள்ளனர். இதில் கோபமடைந்த வினோத்குமார் மூவரையும் தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளார். இதனால் கோபமடைந்த அந்த மூவரும் கையில் இருந்த அருவாளால் வினோத்குமாரை சராமாரியாக வெட்டி உள்ளனர் மேலும் அவரது தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளனர்இந்தக் கொலையை மறைப்பதற்காக அந்த மூன்று சிறார்களிடம் பெட்ரோலை வாங்கி வருமாறு கூறி அதை வினோத் குமாரின் உடலில் மீது ஊற்றி தீ வைத்து எரித்து உள்ளனர். பின்னர் அருகில் பள்ளம் தோண்டி வினோத்குமாரை புதைத்துள்ளனர். .
மேலாக புதைத்து சென்றதால் வினோத்குமார் உடல் மேலே தெரிந்து உள்ளது இதை அங்கே சுற்றித்திரிந்த நாய்கள் இவரது உடலை இழுத்து மேலே போட்டு உள்ளது.இதை செங்கல் சூளையின் அதிபர் கருணாநிதி பார்த்து அதிர்ச்சி அடைந்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு கடந்த 24 ஆம் தேதி புகார் அளித்துள்ளார் . அங்கே விரைந்து சென்ற போலீசார் எலும்பு கூடாக இருந்த உடலை கைப்பற்றி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்குஅனுப்பி வைத்தனர்.அதில் இறந்து போனவரின் தலை உடைந்து இருப்பதாக தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் அப்போதுதான் இறந்து போனவர் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத்குமார் என்று தெரியவந்தது. இதனை அடுத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீராம், ராகுல், ஸ்ரீதர் ஆகிய மூன்று பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இரண்டு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர் .மேலும் 17 வயது உள்ள ஒரு சிறுவன் தலைமறைவாக உள்ளான் ,
அவனையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருவானைக்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

