Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 3 நாளாக சாலையில் வீணாக ஓடும் குடிநீர்.கண்டுகொள்ளாத 42வது வார்டு திமுக கவுன்சிலர் நீலமேகம்

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி 42 வது வார்டு கீழ கல்கண்டார் கோட்டை மகாலட்சுமி நகர் 2 வது தெருவில் சாய்பாபா கோவில் அருகில் மெயின் குடிநீர் குழாய் உடைந்ததால் கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Ad banner

உடைந்த குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி சாலைகளில் தேங்கி ஓடுவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக குடிநீர் கிடைக்காததால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட தண்ணீர் இல்லாமல் கடும் சிரமம் பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட திருச்சி மாநகராட்சி குடிநீர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த மெயின் பைப்பை சரிசெய்து, குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வார்டு திமுக கவுன்சிலர் நீலமேகம் இது குறித்து தகவல் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.