Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி

0

'- Advertisement -

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி 14 ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது

Ad banner

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஸ்ரீ நம்பெருமாள் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேரோட்ட விழா முக்கியமானது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு திருத்தேரில் இன்று முகூர்த்தக்கால் நடும் வைபவம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு முகூர்த்த கால் நட்டனர்.

TVK ad

இதைத் தொடர்ந்து வருகிற 6 ந் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 14 ந் தேதி சித்திரை தேரோட்டமும் நடைபெற உள்ளது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.