Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூர் மற்றும் காட்டுப்புத்தூரில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்ளிட்ட 4 பேர் கைது.குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் எச்சரிக்கை

0

'- Advertisement -

திருச்சி திருவெறும்பூர் மற்றும் காட்டுப்புத்தூரில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்ளிட்ட 4 பேர் கைது

Ad banner

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது.

திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மில் காலனி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது தனது வீட்டின் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தனலட்சுமி (வயது 68) என்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

3 இளைஞர்கள் கைது: காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீலமஞ்சம்பட்டி கால்வாய் கரை அருகே கஞ்சா விற்பனை செய்த கிருபாகரன் (வயது 25), வசந்த் (வயது 19) மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் (வயது 21) ஆகிய மூன்று இளைஞர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.