திருமண தடை நீக்கும் திருச்சி காட்டழகியசிங்கப்பெருமாள் ஆலயத்தில் அழகிய மணவாள பெருமாள் கண்ணாடி அறை சேவை வைபவம் .
திருச்சி காட்டழகியசிங்கப்பெருமாள் ஆலயத்தில் அழகிய மணவாள பெருமாள் கண்ணாடி அறை சேவை வைபவம் நிகழ்ச்சி.

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள், ஆற்றழகிய சிங்கப்பெருமாள், மேட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில்கள் விசேஷமாக போற்றி வழங்கக்கூடிய ஸ்தலங்கள் ஆகும். அந்த வகையில் திருச்சி மாநகர், ஓடத்துறை காவிரிக்கரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிங்கபெருமாள் திருக்கோவில் எனப்படும், ஆற்றழகியசிங்கப்பெருமாள்ஆலயம் பிரார்த்தனை ஸ்தலமாக கருதப்படுகிறது.
திருமண தடை நீக்கும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கச் செய்யும் இத்திருக்கோவிலில் ஸ்ரீ ராமநவமி உற்சவத்தைமுன்னிட்டு கண்ணாடிஅறைசேவை வைபவம் நடைபெற்றது. இதையடுத்து கண்ணாடி அறையில் உற்சவர் அழகியமணவாளன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருக்க, மூலவர் நரசிங்க பெருமாள் வஜ்ரங்கி சேவையில் பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.
திருக்கோவில் பக்தர்களின் நாமசங்கீர்த்தனங்களை பாடி, துளசிமாலை சாற்றி, நெய்விளக்கேற்றி அழகிய மணவாள பெருமாள் மற்றும் நரசிங்கபெருமாளை மனம்உருக வழிபட்டு சென்றனர்.

