Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நேர்மையான அரசியல்வாதிகள் குறைந்து வருகின்றனர்: திருச்சி அறிவாளர் பேரவை நிர்வாகிகள் பதிவியேற்பு நிகழ்ச்சியில் சாருபாலா தொண்டைமான் பேச்சு

0

'- Advertisement -

நேர்மையான அரசியல்வாதிகள் குறைந்து வருகின்றனர்

Ad banner

ஊழல்வாதிகளை மக்கள் அரசியலில் ஏற்றுக்கொள்ள பழகி வருகின்றனர்.

திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் பேச்சு .

திருச்சி அறிவாளர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பேரவை ஒருங்கிணைப்பாளர் அசோகன் வரவேற்றார் நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் புதிய தலைவர் கிரிஜா பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் அவர் பேசும்பொழுது கொரோனா காலத்துக்கு பிறகு நாம் உயிரோடு இருக்கிறோம் என்பது பெரிய விஷயம். உலகத்தில் முக்கிய நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் நாம் சந்தோஷமாக ஒன்று கூடி பேசுவது மிகப்பெரிய பாக்கியம். இன்றைய தலைமுறையினருக்கு தமிழர்களின் கலாச்சார பண்பாடு ஆகியவற்றை கற்றுத் தரவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் நமது விழாக்களை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சினிமா குழந்தைகளை மாற்றுப் பாதையில் வெகுவாக அழைத்துச் செல்கிறது.அரசியல் புனிதமானது மக்களுக்கு சேவை செய்யும் மிகப்பெரிய களம். நேர்மையான அரசியல்வாதிகள் குறைந்து வருகின்றனர். ஊழல் வாதிகளை மக்கள் அரசியலில் ஏற்றுக் கொள்ள பழகி வருகின்றனர். இது குறித்து சமூக விழிப்புணர்வு பெற வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் அறிவாளர் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.