Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற 4 பேர் கைது. 123 மது பாட்டில்கள் பறிமுதல்.

0

'- Advertisement -

திருச்சி மாநகர பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற ப4 பேர் கைது.123 மது பாட்டில்கள் பறிமுதல்.

Ad banner

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதை முன்னிட்டு மூன்று நாட்கள் மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது.

இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த மேல அம்பிகா புரத்தை சேர்ந்த முகமது யாசின் (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று அரியமங்கலம்

பகுதியில் அனுமதி இன்றி மது பாட்டில் விற்பனை சேர்ந்த மேலஅம்பிகா புரத்தைச் சேர்ந்த ஆனந்த் வேலு (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் அனுமதி இன்றி மதுபாட்டில் விற்பனை செய்த மேல கல்கண்டார் கோட்டை சேர்ந்த ராஜ்குமார் (வயது 29) என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் இதே போன்று எடமலைப்பட்டி புதூர் பாரதி நகர் சுரங்கப்பாதையில் அரசு அனுமதி யின்றி மதுபாட்டில் விற்பனை செய்த சந்தியாகு ராஜன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட சந்தியாகு ராஜன் ராஜ்குமார் ஆகியோரை போலீசார் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.