Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மோசடி செய்த இடத்தில் தொழில் செய்து வரும் திருவெறும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜிக்கா உங்கள் ஓட்டு ? சிந்திப்பீர் செயல்படுவீர்

0

'- Advertisement -

கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின் போது நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

Ad banner

இச்சட்டத்தின் கீழ் 1991ஆம் ஆண்டு வாசுதேவன் என்பவரிடம் இருந்த ஆயிரக்கணக்கான நிலங்கள் ஏழை எளிய மக்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டது.

அந்நிலத்தை 20 ஆண்டுகளுக்கு யாருக்கும் விற்கக்கூடாது. விவசாயம் தவிர வேறு தொழில்கள் பார்க்கக் கூடாது என்கிற விதிமுறையும் உள்ளதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்நிலத்தில் கிராம புல எண் 125 இல் விதிமீறல் நடந்து உள்ளது.(வாசுதேவன் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட நிலம் பல புல எண்களை கொண்டது. அதில் 125 இல் விதிமீறல் நடந்துள்ளது)

முதலில் வாசுதேவன் என்பவரிடம் இருந்து அரசின் திட்டம் மூலமாக 125/2 புல எண் கொண்ட நிலங்கள் சிலருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 2008- 2009 வாக்கில் ‘மணி, பன்னீர்செல்வம்’ ஆகியோருக்கு நிலங்கள் கைமாற்றப்பட்டுள்ளது. இதுவே அச்சட்டத்தின்படி விதிமீறல் என்கிறார்கள். மேலும் இந்த மணி மற்றும் பன்னீர்செல்வம் அரசால் அனுப்பபட்ட விசாரணை கடிதத்திற்கும் பதில் அளிக்காமல் இருந்துள்ளார்கள். இதனால் இவர்கள் இருவர் உள்ளிட்ட 9 பேர்களின் நில ஒப்படை உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில் மணி என்பவரிடம் இருந்து மீனா என்பவர் நிலத்தை கிரையம் செய்துள்ளார். இந்த மீனாதான் திருவெறும்பூர் த.வெ.க. வேட்பாளர் நவல்பட்டு விஜி என்பவரின் மனைவி ஆவார்.

திருவெறும்பூர் வட்டாட்சியர் 02.07.2010 அன்று வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் அந்நிலத்தில் ‘மீனா இன்ஜினியரிங் என்ற பெயரில் மதில் சுவர் எடுக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

22.07.2010 அன்று திருவெறும்பூர் வட்டாட்சியர் உதவி ஆணையருக்கு (நிலச் சீர்த்திருத்தம்) எழுதிய கடிதத்தில் ‘குறிப்பிட்ட நிலத்தை கிராமக் கணக்குகளில் மாற்றம் செய்தல்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பின்னாளில் இந்நிலம் விதிகளை மீறி கை மாறியதாகவும், அதோடு மட்டுமல்லாமல் அங்கு தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டு ‘ஒப்படை’ ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த ரத்து செய்யப்பட்ட இடத்தில்தான் ‘மீனா இன்ஜினியரிங்’ எனும் பெயரில் தொழில் நடத்தி வருகிறார் நவல்பட்டு விஜி அவர்கள்.

இவர்தான் தற்போது திருவரம்பூர் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மோசடி செய்து இடம் வாங்கி அந்த இடத்தில் தொழில் செய்து வரும் நாவல்பட்டு விஜி நேர்மையானவரா? இவர் எப்படி பொதுமக்களுக்கு சேவை செய்வார் என்பதை சிந்திக்க வேண்டும் ,நாம் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் ஆட்சியை தீர்மானிக்கக் கூடியது எனவே வெற்றி பெறக்கூடிய தகுதியான, நேர்மையான வேட்பாளரை தேர்ந்தெடுத்து நாம் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் .நமது ஒரு ஓட்டை கூட வீணாக்க கூடாது,சிந்தித்து வாக்களிப்பீர் ஏன திருவெறும்பூர் தொகுதி அரசியல்  விமர்சகர்கள் கூறி உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.